“ராஜபக்சே நாசமா போவான்” சபிக்கும் தமிழகம் நக்கீரன்
by admin on 10/02/09 at 11:43 am
இதுக்கு மேலே ஒரு அநியாயம் உலகத்திலேயே இருக்க முடியாதுங்க. எத்தனை குழந்தைங்களை குண்டு போட்டுக் கொல்லுறாங்க. எத்தனை பொம்பளைங்களை சீரழிக்கிறாங்க. வீட்டையும் இழந்து, காட்டிலும் இருக்க முடியாம செத்து மடியுது தமிழ் சனம். தினம் தினம் இதை டி.வி.யில பார்க்குறப்ப நமக்கே ரத்தமெல்லாம் கொதிக்குது. இந்தியாவை ஆட்சி பண்ணுறவங்க என்னத்த பண்ணிக்கிட்டிருக்காங்க?
-மக்கள் ஆய்வகத்தின் சார்பில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் நடத்திய கருத்தாய்வில் மக்கள் வெளிப்படுத்திய கருத்துகளின் சாராம்சம் இதுதான். சென்னை லயோலா கல்லூரியின் கீழ் [...]
இனி ‘ஸ்லம்டாக்…’ சிம்பு!!
உலகம் முழுவதும் பாராட்டுக்களையும் விருதுகலையும் அள்ளிக் குவிக்கும் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகத் தயாரா இருக்கிறது. தமிழ்ப் பதிப்பில் சிம்பு, பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் ஆகியோர் டப்பிங் பேசுகின்றனர்.
இந்தி நடிகர்கள் அனில்கபூர், இர்பான் கான், மற்றும் லண்டனைச் சேர்ந்த தேவ் படேல், ஹாலிவுட் நடிகை பிரீடா பின்டோ உட்பட பலர் நடித்துள்ள ஆங்கிலப் படம் ஸ்லம்டாக் மில்லியனர்.
டேனி பாய்ல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிறப்பாக இசை அமைத்ததற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘கோல்டன் குளோப்’ [...]
விளம்பர துண்டு பிரசுரமாகும் ரூபாய் நோட்டுகள்
விளம்பர துண்டு பிரசுரமாகும் ரூபாய் நோட்டுகள்
திருநெல்வேலி, பிப். 2: ரூபாய் நோட்டுகளில் விளம்பரங்களை அச்சிட்டு ஆதாயம் தேடிக் கொள்ளும் செயல் தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
பாமர மக்களின் தவறான உபயோகத்தால் ரூபாய் நோட்டுகள் அழுக்கடைந்து, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்னரே காலாவதியாவது ஒருகாலத்தில் பெரும் பிரச்னையாக இருந்து வந்தது.
இதையடுத்து, ரூபாய் நோட்டுகளில் “பின்’ அடிக்கக் கூடாது, எழுதக் கூடாது என கடுமையான சில விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன் பின்னர், அதுபோன்ற செயல்கள் பெருமளவு குறைந்தன.
தற்போது சிறு, [...]
இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 காயமடைந்துள்ளனர்
மேலும், இப்போது, சிறிலங்கா படையினர் பாவிக்கும் பீரங்கிக் குண்டுகள் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் ஒரு வகை எரிகுண்டுகளாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களும், மேலும் 10 ஆயிரம் வரையான ஏற்கெனவே குடியிருந்த மக்களும் வாழ்ந்து வந்த சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை வரை சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இன்றைய இந்த தாக்குதலில்55 தமிழர்கள் படுகொலை [...]
கிழக்கு மாகாண சபையை அவமதித்த முரளிதரன் எம்பியை கட்சியில் இருந்து நீக்குவதற்கு ரிஎம்விபியின் மத்திய குழு முடிவு
கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த பாராளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரன் எம்பி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ தலைவரும் கிழக்கு மாகாண சபையின் மான்புமிகு முதலமைச்சருமான திரு. சி. சந்திரகாந்தன் அவர்களை விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவானது இன்று நண்பகல் கட்சியின் செயலகத்தில் அவசரமாக ஒன்று கூடியது.
கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை உத்தியோகபூர்வமாக தலைவர் அவர்கள் ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவானது முரளிதரன் எம்பியால் ஆங்கில ஊடகமொன்றில் இன்று (03-01-2009) வெளியான பேட்டியில் [...]
Full Storyஈழத்தமிழர்க்கான உயிர் திறந்த மூன்றாவது தியாகி - ஜெகதேசன்
நேற்று திங்கக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் மலேசியாவின் ஜொகூர் மாநிலம் தாமான் புத்ரி வங்சா. புக்கிட் ஜெயாவைச் சேர்ந்த 29 அகவையுடைய
ஸ்டீபன் ஜெகதேசன் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுமை ஊர்திச் சாரதியாக தொழில்புரிந்து வந்த ஸ்டீபன் கடந்த 10 நாட்களாக பித்து பிடித்தவர்கள் போல் காணப்பட்டதாகவும் இலங்கையில், ஈழத்தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுவது குறித்து நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை படித்து மிகவும் கவலை கொண்டிருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் முத்துகுமார் [...]
முதலமைச்சராக கடமையாற்றக் கூடிய தகுதி பிள்ளையானுக்கு இல்லை – கருணா
வால் ஸ்ரீட் சஞ்சிகைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இன்னமும் தமது பயங்கரவாதப் பண்புகளை முழுமையாக கைவிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வகிக்கும் அளவிற்கு பிள்ளையான் தகுதியானவரல்ல என கருணா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கருணா நாட்டைவிட்டு தப்பிச் சென்ற இக்கட்டான சூழ்நிலையில் கட்சியை தாமே கட்டிக்காத்ததாக பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள விடாது மத்திய அரசாங்கம் தமது கைகளுக்கு விலங்கிட்டுள்ளதாக அவர் [...]
வெளிநாட்டில் வாழும் தமது குடிமக்களிடம் 500 மில்லியன் டொலர் நிதியுதவி கோருகிறது சிறிலங்கா அரசு
சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு என வெளிநாட்டில் வாழும் சிறிலங்கா மக்களிடம் 500 மில்லியன் டொலர் நிதித் தொகையை சேகரிக்கத் திட்டமிட்டிருப்பதாக சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அரை மில்லியனில் இருந்து ஒன்றரை மில்லியன் டொலர்கள் வரை, வெளிநாட்டில் வாழும் சிறிலங்கா மக்களிடம் நிதி சேகரிக்க முடியும் என நம்புவதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் வீழ்ச்சி காரணமாக, நாட்டின் அபிவிருத்தி பெரிதும் பாதிப்படைந்திருப்பதாகத் தெரிவித்த அவர், [...]
புலிகளின் கட்டுப் பாட்டுப்பகுதி மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது: சிறிலங்கா அரசு அறிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொடர்ந்தும் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை சிறிலங்கா தேசிய பாதுகாப்பு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முல்லைத்தீவின் வடக்குப் பகுதியில் 35 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தை ‘பாதுகாப்பு வலயமாக’ அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்களை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தது.
இதன் மூலம் எமது பகுதிகளுக்கு வந்த மக்களுக்கு [...]
கோயம்புத்தூரில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய ஈழ அகதிகள் மீது தாக்குதல்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியில் வாழும் ஈழ அகதிகள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் அவர்களை அடித்து உதைத்து கலைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்கா அரசின் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டித்தும் இதற்கு இந்திய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும், அங்குள்ள ஈழ அகதிகள் இந்த உண்ணாநிலை போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இந்திய மத்திய அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்காவிட்டால் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அவர்கள் [...]
“உரிமைக்காக போராடும் போராளிகளை பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பது சிறுபிள்ளைத்தனமானது”: விடுதலை இதழ் கண்
இரு தரப்பாரும் போரை நிறுத்தவேண்டும் என்று இதோபதேசம் செய்து வருகிறார்கள்.
போராளிகள் அங்கு போராடுவது அவர்களின் மக்களைக் காப்பாற்றுவதற்காக. அந்த மக்களும் தங்களின் வாழ்வுரிமைக்காக, மானவாழ்வுக்காக உயிரைத் துச்சமாகக் கருதி 24 மணிநேரமும் களத்தில் நிற்பவர்கள் போராளிகள்தான் என்ற உண்மையில் உண்மையாகவே இருக்கிறார்கள். உறுதியாகவும் உள்ளனர்.
ஈழத் தமிழர்கள் தங்களுக்காகப் போராடும் போராளிகளின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாலும், நல்லெண்ணத்தாலும், உண்மையிலே போராளிகள் போராடி வருவதாலும், விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழ் மக்களையும் பிரிக்கவே முடியாது என்ற உண்மையான கண்ணோட்டத்தைப் புரிந்து [...]






