Archive for January, 2009
கனடா கால்கரியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்
கனடாவின் தமிழ் மக்கள் மிக குறைவாக வாழும் அல்பேர்டா மாநிலத்தில் கால்கரி நகரில் கால்கரி நகரசபை மண்டபத்தின் முன்னால் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இக்கவனயீர்ப்பு போராட்டமானது மிகவும் திடீரென எடுத்த ஒரு முடிவு எனவே எல்லா மக்களிற்கும் உடனடியாக அறிவிக்க முடியவில்லை ஆனால் இங்குள்ள மக்களோ தாயகத்தில் வாழும் தமது உறவுகளிற்காக தமது கடமைகளை உணர்ந்து இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் கார்களில் சென்ற வென்று இன மக்கள் கார்களை [...]
சுவிஸ் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த முயற்சி
ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த எத்தனித்த போது சுற்றி நின்ற எல்லோராலும் தடுத்து நிறுத்தப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை தமிழ் இளைஞர்கள் நேரில் சென்று கலந்துரையாடியபோது அவர்கள் கூறியதாவது:
நீங்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை இன்றே கலந்தாலோசிக்க முன் வருகின்றோம் ஆனால் வெறும் 7 நபர்களின் கருத்தாக எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாதெனவும் இவ் விடையத்திக்கு முக்கியத்துவமளித்து உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமெனில் பல ஆயிரம் [...]
தமிழகத்தையும் உலகையும் ஏமாற்றவே மஹிந்தவின் 48 மணிநேர போர்நிறுத்தம்; இன்றும் 28 பொதுமக்கள் படுகொலை: 60 பேர் படுகாயம்: பா.நடேசன் குற்றச்சாட்டு
சிறிலங்கா அரசாங்கம் 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவித்திருப்பதாக ஊடகங்கள் ஊடாக செய்திகளை வெளியிட்டிருந்தது. ஆனால், இன்றும் வழமை போலவே பொதுமக்கள் குடியிருப்புக்கள், சந்தைகள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் எனப் பாராது கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இன்றும் கூட சிறிலங்கா அரச படையினரின் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 28 [...]
முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதில் சிக்கல்: ‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்’;கடிதத்தில் குறிப்பிட்ட வாசகம்!
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நேற்று வாலிபர் முத்துக்குமார் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு முத்துக்குமாரின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முத்துக்குமார் உடலுக்கு அனைத்துத் தரப்பினரும் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக கொளத்தூர் வியாபாரிகள் சங்க கட்டிடம் முன்பு பெரிய மேடை அமைக்கப்பட்டது. நேற்றிரவு அந்த மேடைக்கு முத்துக்குமார் உடல் எடுத்து வரப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது.
இன்று சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து முத்துக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். செங்கல்பட்டில் [...]
வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு விடுதலைப் புலிகள் வீரவணக்கம்
ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை தற்கொடையாக்கிய வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்தி வரும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் [...]
இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை: ஐ.நா. இணைப்பாளர் கார்டன் வைஸ்
இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை என ஐ.நா. மனிதாபிமான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை வன்னிப் பகுதியில் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராக நடக்கும் கொடூரமான தாக்குதல்களை 48 மணிநேரம் நிறுத்துவதாகவும் அதற்குள் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்கள் வெளியேறிவிட வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்ச அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொழும்புவிலிருந்து தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், இலங்கையில் உள்ள ஐநா மனிதாபிமான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்டன் வைஸ், [...]
புறக்கணியுங்கள் கலைஞர் தொலைக்காட்சியை……………..
“தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி” போட்டாலும் இப்படி ஆரம்பம் ஆகும் மதியம் ஒரு மணி கலைஞர் செய்திகள் இது வரை தேனாய் இனித்த இந்த வரிகள் இன்று நெருப்பை எடுத்து காதில் ஊற்றியது போல் உள்ளது. அடப்பாவி இன்னுமாடா இந்த ஏமாற்று வேலை, இந்த நிகழ்வு பிறகு கருணாநிதி தெளிவான முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கையில் அவரின் அறிக்கை ( ஒரு எதிர்பார்ப்பு) முதலில் அவரின் தரம் கெட்ட அந்த தொலைக்காட்சியின் செய்தியில் இடம்பெறும் [...]
Full Storyஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: (தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமரன் அளித்த இறுதி மடல்)
தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் [...]
தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர் பெற்றோல் ஊற்றித் தற்கொலை
தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர் பெற்றோல் ஊற்றித் தற்கொலை
தமிழ்நாட்டில் திரு. முத்துக்குமார் என்ற பெயர் உள்ள இளம் பத்திரிகையாளர் பெற்றோல் ஊற்றி தனக்குத்தானே நெருப்பு வைத்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையைக் கண்டிக்கும் முகமாகவே அவர் சென்னையில் உள்ள மத்திய அரசின் காரியாலயம் சாஸ்திரிபவன் முன்னால் தற்கொலை செய்தள்ளார்.
ஈழத்தமிழர்களை இந்திய அரசு பாதுகாக்கத் தவறிவிட்டது, வெளிவிவகார அமைச்சர் ப்ரணாப் முகர்ஜி தனது பயணத்தின் போது போரை நிறுத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்தி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத்தவறிவிட்டார். இதனால் மத்திய [...]
‘விடுதலைப்புலிகள் பலத்தை இழக்கவில்லை’- பா. நடேசன்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக பி பி சி தமிழோசைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களை இழந்து வருவது குறித்து கேட்டபோது, விடுதலை இயக்கங்கள் இது போன்று பின் வாங்கிச் செல்வதும்- பிறகு அந்த இடங்களை மீண்டும் பிடிப்பதும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான் என்று கூறிய அவர், விடுதலைப் [...]
Full Story





