Eelamwin Blog

“ராஜபக்சே நாசமா போவான்” சபிக்கும் தமிழகம் நக்கீரன்
இதுக்கு மேலே ஒரு அநியாயம் உலகத்திலேயே இருக்க முடியாதுங்க. எத்தனை குழந்தைங்களை குண்டு போட்டுக் கொல்லுறாங்க. எத்தனை பொம்பளைங்களை சீரழிக்கிறாங்க. வீட்டையும் இழந்து, காட்டிலும் இருக்க முடியாம செத்து மடியுது தமிழ் சனம். தினம் தினம் இதை டி.வி.யில பார்க்குறப்ப நமக்கே ரத்தமெல்லாம் கொதிக்குது. இந்தியாவை ஆட்சி பண்ணுறவங்க என்னத்த பண்ணிக்கிட்டிருக்காங்க?

-மக்கள் ஆய்வகத்தின் சார்பில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் நடத்திய கருத்தாய்வில் மக்கள் வெளிப்படுத்திய கருத்துகளின் சாராம்சம் இதுதான். சென்னை லயோலா கல்லூரியின் கீழ் இயங்கும் மக்கள் ஆய்வகம் நடத் திய இந்த ஆய் வில் இலங்கைத் தமிழர் பிரச் சினை தமிழக அரசியல் களத் திலும் தேர்தலி லும் எத்தகைய தாக்கத்தை ஏற் படுத்தும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

-ஒவ்வொரு கட்சி யும் தன்னிச்சையாகச் செயல்படாமல் முதல் வர் தலைமையில் ஒன்றிணைந்து செயல் படவேண்டுமென 86 சதவீதத்தினர் தெரிவித் துள்ளனர். தி.மு.க. தலைவர் துணிச்சலாக செயல்படவேண்டும் என 71 சதவீதம் பேர் தெரிவிப்பதுடன், இப்பிரச்சினையை முன்னிட்டு தி.மு.க. ஆட்சியை இழக்க நேரிட்டால் அடுத்து வரும் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மீண்டும் தி.மு.க.வே ஆட்சிக்கு வரமுடியும் என 58.5 சதவீதத்தினர் தெரிவிக்கின்றனர். 20 சதவீதம்பேர் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்கின்றனர்.

-இலங்கைத் தமிழர் பிரச்சினை நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றும், இதில் காங்கிரசுக்கு 39 சதவீத பாதிப்பும், மத்திய அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு 24.5 சதவீத பாதிப்பும் மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு 21 சதவீத பாதிப்பும் ஏற்படுமென கள ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கள ஆய்வுகள் குறித்து நம்மிடம் பேசிய மக்கள் ஆய்வகத்தின் பேராசிரியரான டாக்டர் ராஜநாயகம், “”இலங்கைத் தமிழர் பிரச் சினை என்பது மிக முக்கியமான பிரச்சினை யாக இருப்பதால் இதுபற்றி தமிழக மக்க ளின் மனநிலையைத் தெரிந்துகொள் வதற்காக இரண்டு கட்டங்களாக ஆய்வு நடத்தினோம். ஜனவரி 13 முதல் 18-ந் தேதி வரை முதல் கட்ட ஆய்வு. ஜனவரி 25 முதல் 31 வரை இரண்டாவது கட்ட ஆய்வு.

இதை சர்வே என்று சொல்வதை விட கள ஆய்வு என்பதுதான் பொ ருத்தமாக இருக்கும். ஏனென்றால் இது எண் களின் அடிப்படையில் எடுக்கப்படாமல் எண்ணங் களின் அடிப்படையில் எடுக் கப்பட்டுள்ளது. முத்துக் குமார் தீக்குளிப்பின் போது களஆய்வின் கடைசி கட்டத்தில் இருந்தோம். அதனால் அதன் முழுமையான தாக்க மும், தி.மு.க. செயற்குழு தீர்மானங்கள், கடையடைப்பு ஆகியவையும் இதில் பிரதிபலித்திருக்காது. அவற்றையும் கணக்கில்கொண்டால் இந்த எண்ணங் கள் இன்னும் அதிக வீச்சுடன் இருக்கும்” என்கிறார்.

மக்களின் எண்ணங்களை 14 மணி நேர வீடியோ வாக பதிவு செய்துள் ளார்கள் கள ஆய் வில் ஈடுபட்ட மாண வர்கள். அவர்கள் தங்களின் அனுபவங் களை நம்முடன் பகிர்ந்துகொண்ட போது, இதற்கு முன் பல சர்வேக்களுக் காக மக்களைச் சந் தித்திருந்தாலும் இது எங்களுக்கு புது அனுபவமாக இருந்தது. மக்களிடம் இந்தளவுக்கு தமிழின உணர்வு இருக் கும் என்பது சென்னைவாசிகளான எங்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந் தது. வடமாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் ஏறத்தாழ 100 சதவீதம் மக்களும் இலங்கைத் தமிழர் நலனில் முழுமையான அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களிலும் இதே உணர்ச்சி யலையைப் பார்க்க முடிகிறது.

பொதுவாக, அரசியல் கட்சிகள் அனைத்துமே இப்பிரச்சினையில் உண்மையான அக்கறை செலுத்த வில்லை என்று சொல்லும் மக்கள், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீது கடுங்கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். இப்பிரச்சினை இப்படியே நீடித்தால் நிச்சயம் எம்.பி.தேர்தலில் விளைவுகள் தெரியும் என்ற மாணவர்கள், மக்களின் எண்ணங் களை பதிவு செய்திருந்த வீடியோ காட்சிகளைப் போட்டுக் காட்டினர்.

“”கொழந்தைங்களெல்லாம் பாலுக்கு ஏங்கி ஏங்கியே மூச்சு திணறி செத்துப் போகிற கொடுமை வேற எங்கேயாவது உண்டா?”

“”பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாம ஆடு, மாடு மாதிரி பசங்களெல்லாம் ஓடிக்கிட்டே இருக்கிறதைப் பார்த்தா நெஞ்சு பதறுது”.

“”வயசானவங்களெல்லாம் குண்டுவீச்சுக்கு தப்பிக்க முடியாம, செத்தே போயிடலாம்னு குண்டு விழுகிற இடமா பார்த்து உட்காருகிற நிலைமை இருக்கே! இதை யார்கிட்டே போய் சொல்றது?”.

“”தமிழன் அடிபட்டா கேட்க நாதியே இல்லையா?”

“”அங்கே நடக்குற கொடுமைகளை டி.வி.யில பார்க்கும்போது சோறு தண்ணி இறங்க மாட்டேங்கு துங்க”.

“”நம்ம தொப்புள்கொடி உறவு களை குண்டு போட்டுக் கொல் லும் ராஜபக்சே நாசமா போவான்”.

-உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படுகின்றன மக்களின் எண்ணங்கள்.

-சகா

MIA : பணம், புகழ் வந்தால் தமிழர்களை மறக்கும், இவர்களுக்கு மத்தியில்
இலங்கையில் திட்டமிட்ட இனஅழிப்பு நடைபெற்று வருகிறது - மாதங்கி மாயா அருள்பிரகாசம்: தொலைக்காட்சி நேர்காணலின் GTNனின் தமிழ் வடிவம்:

இலங்கை வடபாகத்தில் மூன்றரை இலட்சம் மக்கள் போருக்குள் அகப்பட்டுள்ளார்கள். அங்கிருந்து அவர்களால் வெளியேற முடியவில்லை. அவர்களுக்கான உதவிகள் தடை செய்யப்பட்டுள்ளன. மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் உண்மையைச் சொல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு ஒரு இனஅழிப்புத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் இசைஞரான மாயா என்கிற மாதங்கி மாயா அருள்பிரகாசம்.

ஓஸ்கார் மற்றும் கிராம்மி விருதுகளுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மாயா தன்னுடைய இசைத் தொகுப்புக்களால் இதயங்களை ஆட்டிப்படைக்கும் இலங்கைத் தமிழர். அவர் அண்மையில் வழங்கிய தொலைக்காட்சி நேர்காணலிலிருந்து:

இலங்கை இந்தியாவிற்கு அருகிலிருக்கும் ஒரு சிறு தீவு. அங்கு சிங்களவர்கள் தமிழர்கள் என்று இரண்டு இனங்கள் இருக்கின்றன. பெரும்பான்மையான சிங்களவர்களின் அரசாங்கம் அங்கு இருக்கிறது. தமிழர்கள் சிறுபான்மையினர். நான் அந்தச் சிறுபான்மையான தமிழர்களுள் ஒருத்தியாகவே பிறந்தேன். என்னுடைய வாழ்க்கைக் காலத்தின் ஒரு குறுகிய காலத்தை ஏறத்தாழ பத்து வருடங்கள் அங்கு வாழ்ந்தேன். நான் அங்கிருந்த அந்தக் காலகட்டத்திலேயே போர் ஆரம்பமானது. அதன் காரணமாக நான் இங்கிலாந்தில் அகதியானேன்.

நான் அங்கிருந்து புறப்பட்டதிலிருந்து இன்று வரை அங்கு ஒரு திட்டமிட்ட இனஅழிப்பு நடைபெற்று வருகிறது. இலங்கை எங்கிருக்கிருக்கிறது என்று எவருக்கும் தெரியாததால் அந்த இனஅழிப்பைப் பற்றிக்கூட எவருக்கும் தெரிவதில்லை. அங்கு மூன்றரை இலட்சம் மக்கள் போருக்குள் அகப்பட்டுள்ளார்கள். அங்கிருந்து அவர்களால் வெளியேற முடியவில்லை. அவர்களுக்கான உதவிகள் தடை செய்யப்பட்டுள்ளன. மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் உண்மையைச் சொல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அங்கு நீண்டகாலமாக ஒரு இனஅழிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தும் ஒருவருக்கும் அது தெரியவரவில்லை என்றால் அதற்குக் காரணம் பிரச்சாரம் தான். நீங்கள் தமிழர்களைப் பற்றிச் சிந்திக்கும் போது புலிகளைப் பற்றியும் சிந்திக்கிறீர்கள். அது நூறுவீதம் சரியானதல்ல. முதலில் தமிழர் என்று சொல்லப்படுபவர்கள் தமிழ் மக்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ப்புலிகள் என்பது வேறுபட்ட ஒரு விடயம். இரண்டு பிரிவினருமே வேறுவேறானவர்கள். ஒரு சதுரத்தையும் வட்டத்தையும் போல.

இலங்கையில் நான்காயிரம் தமிழ்ப் புலிகள் மட்டுமே உள்ளனர். நீங்கள் விரும்பினால் ஒரே நாளில் அவர்களைத் துடைத்தெறிந்துவிட முடியும். இலங்கை இராணுவத்தைப் போல பெரும்படையணி மற்றும் ஆயுதங்களை அவர்கள் கொண்டிருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட படையினரைக் கொண்டிருக்கிற பெரிய இராணுவம். அதனால் புலிகளை இலகுவாகக் கையாள முடியும். அந்தப் படையினரைக் கொண்டு முழுத் தமிழ் இனத்தையே அழித்துவிட முடியும். இதன்காரணமாகத் தான் அங்கு நடப்பவற்றை நீங்கள் கேட்க முடியாமல் இருக்கிறது. அதற்கான பிரதான காரணம் ஊடகங்களில் பிரச்சாரம் தான். ஏனெனில் நீங்கள் ஒரு பயங்கரவாத இயக்கமாக இருந்தால் உங்களுக்குப் பேசுவதற்கான உரிமையில்லை. தமிழ் மக்களும் அவ்வாறு தான். தமிழ் மக்களுக்கு அங்கு பேசுவதற்கான உரிமை இல்லை. அவர்களுக்கு வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு அங்கு எந்த வகையான சுதந்திரங்களும் இல்லை.

இது தான் இங்கு பிரதானமான பிரச்சினை. நீங்கள் அல் ஹைய்டா பற்றிச் சிந்திக்கும் போது ஆப்கானிஸ்தானைப் பற்றிச் சிந்திப்பதில்லை. நீங்கள் அங்கு போகவும் அல்ஹைய்டாவுடன் சண்டையிடவும் அவர்களைக் கொல்லவும் முடியும். அது உங்களால் முடியும். ஆனால் ஆப்கானிஸ்தானை நீங்கள் துடைத்தழித்து விட முடியாது. ஆனால் இலங்கையில் அது தான் நடக்கிறது. தமிழ் மக்களையே துடைத்தெறிகிற ஒரு யுத்தம் நடைபெறுகிறது. அமெரிக்கா உண்மையாகவே புரிந்து கொள்ள வேண்டிய விடயம் இதுதான். அவர்கள் உலகிலேயே பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடக்கூடிய முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்.

அத்தோடு மிக முக்கியமான ஒன்று, ‘அவள் தமிழா. அப்போது நிச்சயமாகப் தமிழ்ப்புலி ஆகத் தான் இருக்க வேண்டும்’ என்பது போன்று பொறுப்பற்று வார்த்தைகளைத் தூக்கி எறிவதை தவிர்க்க வேண்டும். உண்மையிலேயே இதன் விளைவாக தாயகத்தில் மக்கள் கொல்லப்பட நேரிடும் என்பதை உணர வேண்டும்.

நான் இந்தியாவிலும் வசித்திருக்கிறேன். நான் எப்போதும் பிரயாணம் செய்து கொண்டிருப்பேன். ஒரு அகதி என்கிற போது அது தான் நேரும். எது உண்மை எது பொய் என்று நான் எனது சொந்த மூளையைப் பாவித்தே தீர்மானிக்க விரும்புகிறேன். எனக்குத் தெரியும் அது என்னுடைய சொந்த அனுபவத்தினால் விளைவது என்று. என்னுடைய இசையிலும் அவ்வாறு தான்.

நான் ஒரு இசைஞராக வர எண்ணியபோதே என்னுடைய இசையைப் பாவித்து ஏதோ ஒரு வகையான மாற்றத்தைக் கொண்டு வர விரும்பினேன். என்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த, என்னுடைய நம்பிக்கைகளைத் தெரிவிக்க எண்ணினேன். இசைத்தட்டுக்கள் விற்பனையாவதோ புகழோ அல்ல வெற்றி. அதற்கும் மேலாக மையநீரோட்டத்தில் அல்லது பிரதான போக்கில் வழமையாகக் கேள்விப்படாதவற்றைப் பற்றிய ஒரு பார்வை வீச்சை உருவாக்குவது, அதற்கான சிந்தனையைத் தூண்டுவது தான்.

எனக்குத் தெரியும் சில கலைஞர்கள் உண்மைகளைப் பேசுவதில்லை என்று. அவர்கள் அதனைப் பேச வெட்கப்படுகிறார்கள் என்று. உண்மை எவ்வாறிருந்த போதும் அவர்கள் மக்களைக் களிப்பூட்டவே இசையைப் பயன்படுத்துகிறார்கள.

இசை ஏற்கெனவே சமூக மாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது ஒன்றும் தவறானது அல்ல. வெற்றியடைய வேண்டும் என்ற அழுத்தத்தினாலும், கவர்ச்சிப்பாவையாகத் தோற்றமளிக்க வேண்டும் என்கிற அழுத்தத்தாலும் நாங்கள் உண்மைகளைப் பேசுவதற்கு ஒரு வகையில் வெட்கப்படுகிறோம். இசையை சமூகமாற்றத்திற்குப் பயன்படுத்துவதிலிருந்து விலகி நிற்கிறோம்.

நான் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி அக்கறைப்படவில்லை. இது நான் பிரதிநிதித்துவப்படுத்தும் எனது மக்களைப் பற்றியது என்பது தான் உண்மை.

பேப்பர் பிளேன் என்கிற என்னுடைய பாடல் சிலருக்கு நாகசரமானதொன்றாக இருக்கிறது. வேறு சிலருக்கு அது எளிதில் புரிகிற தெளிவான மிகவெளிப்படையான பாடலாயிருக்கிறது.

ஓயாமல் பலர் கேட்கிற கேள்வி நீ பயங்கரவாதியா என்று. இல்லை. அதைப்பற்றி அதில் ஒன்றுமே இல்லை. அது ஆயுதங்களை விற்பனை செய்து பில்லியன் டொலர் கணக்கில் சம்பாதிக்கும் நிறுவனங்கள் பற்றியதாக இருக்கலாம். அது புலம் பெயர்பவர்கள் அதன் விளைவுகள் பற்றியதாக இருக்கலாம். அதனை எனது ரசிகர்களிடமே விட்டு விடுகிறேன்.

மாயா என்கிற மாதங்கி மாயா அருள்பிரகாசம். அண்மையில் வழங்கிய தொலைக்காட்சி நேர்காணல் GTN ற்காக விசேடமாக மொழியாக்கம் செய்யப்பட்டது.

வீடியோ செய்தி காண

http://www.globaltamilnews.net/includes/news_player.php?ptype=v&nid=5714

நன்றி : http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=5714&cat=1

இது உண்மையாக இருந்தால், புலிகள் செய்ய வேண்டியது
புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 750 படையினரை மீட்டுத்தருமாறு பெற்றோர் ஐ.சி.ஆர்.சியிடம் கோரிக்கை

1)தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள ராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும். இனி இப்படியானதொரு ஆக்கிரமிப்பை ஒரு நாளும் மேற்கொள்ள கூடாது.

2)தமிழர்களை கொல்வது நிறுத்தப்பட வேண்டும்

3)தமிழர்களை கொன்றதற்கு ராசபக்சே பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். தமீழீழ குற்றவாளி கூண்டில் ராசபக்சே ஏற்றப்பட வேண்டும். அதை தமீழீழ நீதித்துறை விசாரணை செய்ய வேண்டும்.

4)தமிழர்களை இனி கொல்ல மாட்டேன் என்ற ஒப்பத்தில் கையொப்பமிட வேண்டும்.

5)முதலில் 50 பேரை விடுதலை செய்யலாம், எப்படி மேற்கூறிய 4-விதிகளும் கடைபிடிக்கபடுகிறதோ அதை பொறுத்து பகுதி, பகுதியாக இவர்களை விடுவிக்கலாம்.

இலங்கை இராணுவத்தில் இருந்து காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், தமது பிள்ளைகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் தேடிப்பார்க்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

இராணுவ செய்தி ஊடகத்தினால், இவர்கள் விஸ்வமடு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டதையடுத்தே அவர்கள் இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளனர்.

கண்டியில் உள்ள, இராணுவத்தில் காணாமல் போனவர்களின் சங்கத்தினால், சர்வதேச செஞ்சிலுவை சஙகத்தின் கொழும்பு கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், சுமார் 750 இராணுவத்தினர் விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3ம் திகதி பெப்ரவரி மாதம் இலங்கை இராணுவத்தினால் விஸ்வமடு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட நகர்வினை தாங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், அந்த பிரதேசத்தில் உள்ள தடுப்பு முகாமில் சுமார் 750 க்கும் அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் இராணுவ இணையத்தளத்தில் காண்பிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அவர்களை விடுவிப்பது தொடர்பில் துரிதமாக செயற்பட வேண்டும் என அந்த கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை விரைவில் பிரிவதே நல்லது தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும்
இத்தனை தமிழின கொலைகளுக்கு பின்பும் இலங்கையில் ஒன்று பட்ட நாடாக இருப்பது என்பது நடக்காத காரியம். தமிழர்களுக்கு என்று ஒரு அரசு இருந்தது ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு, தமிழர்களின் காலாச்சரம், கலை யாவும் தனிப்பட்டவையே. எங்கிருந்தோ வந்த ஒரியர்கள், தமிழர்களை அடிமைபடுத்த நினைப்பது எந்த விதத்தில் நியாயம். நாங்கள் என்ன உங்களின் இடத்தையா கேட்கிறோம், தமிழனின் நிலம் , எங்கள் மூதாதையர்களால் ஆட்சி செய்யப்பட்ட நிலத்தைதானே கேட்கிறோம்.

ஒண்ட வந்த பிடாரி ஊர்பிடாரையை விரட்டியது போல எங்களை ஏன் விரட்டுகிறிர்கள் தமிழர்களை அது அவர்களின் சொந்த மண்.

நீங்கள் தமிழனை கொல்லவும் வேண்டும், தமிழனும் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை.

நாங்கள் இந்தியா அனைத்து இனங்களும் ஒன்றாக இருக்கிறோம், உங்களை போல் நாங்களும் ஒரு இனத்தை கொன்று கொண்டிருப்போமானால், அவர்களும் போராட ஆரம்பித்திருப்பார்கள் தனி நாடு வேண்டுமென்று. அப்படி ஒரு நிலைமை வந்தால் கண்டிப்பாக ஒரு வாக்கெடுப்ப்பு நடத்தி வேறு நாடாக கொடுப்பதை தவிர வேறு வழி கிடையாது. ஆனால் இந்தியா அந்த அளவுக்கு இல்லை உங்களை மாதிரி.

ஈழப்போரில் இந்திய இராணுவம் - தமிழர் நெஞ்சில் தகிக்கும் நெருப்பு!
தமிழ்நாட்டில் எழுந்துள்ள தமிழீழ ஆதரவுப் பேரலை, தமிழக அரசியலிலும் சில முக்கியமான திருப்பங்களுக்கு வழி வகுத்துள்ளது.பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணமோ, 48 மணி நேரப் போர் நிறுத்தமோ தமிழீழ மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டு வரவில்லை. மாறாக, நாளுக்கு நாள் அங்கே நிலைமை மோசமாகிக் கொண்டுள்ளது.

பட்டினிப் போர், மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம், ஊர்வலம், கண்டனப் பொதுக்கூட்டம், மாநாடு போன்ற அனைத்து விதமான எதிர்ப்புகளும் பயனற்றுப் போனபின், தமிழக இளைஞர்கள் சிலர் தங்களையே கொளுத்திக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். ‘இனிப் பொறுப்பதில்லை’ என்னும் நிலை எங்கும் பரவிக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழக மாணவர்களிடம், தமிழீழ ஆதரவு பெருகிக் கொண்டுள்ளது.

இளைஞர் முத்துக்குமாரின் தற்கொடைக்குப் பிறகு, ஈழ ஆதரவு மேலும் கூர்மையடைந்துள்ளது. ஆனால் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சட்டமன்றத்தில் சுதர்சனம், யசோதா ஆகியோர் பேசியுள்ள பேச்சு, காங்கிரசின் மீது கடுங்கோபத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஒரு பதற்றமான சூழலில் எப்படிப் பேச வேண்டும் என்னும் பக்குவம், 125 வயதாகிவிட்ட காங்கிரசுக் கட்சியின் தலைவர்களுக்குச் சிறிதும் இல்லாமல் போய்விட்டது.

1965 ஆம் ஆண்டு, தமிழக மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் காங்கிரசின் மீது எவ்வளவு கோபம் கொண்டிருந்தார்களோ, அதற்குச் சற்றும் குறையாத, சினமும் சீற்றமும் இன்று காணப்படுகிறது. 65 ஆம் ஆண்டிலாவது, இந்தி திணிக்கப்பட்டது ; அவ்வளவுதான். ஆனால் இன்றோ தமிழ் இனமே அழிக்கப்படுகின்றது.

அது அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை என்றும், அவ்வரசின் இறையாண்மையில் நாம் தலையிட முடியாது என்றும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது கேலிக்குரியதாகும். எப்போது ஒரு நாட்டிலிருந்து மக்கள் வெளியேறி, இன்னொரு நாட்டிற்குள் அகதிகளாக நுழைகின்றனரோ, அப்போதே அது உள்நாட்டுப் பிரச்சினை என்னும் நிலையைக் கடந்து, உலகப் பிரச்சினையாக ஆகிவிடுகிறது. அதே போல, நாட்டை ஆளும் அதிகார உரிமைதான் இறையாண்மையே அன்றி, சொந்த மக்களையே எறிகுண்டு வீசியும், பீரங்கிகளால் தாக்கியும் கொன்றழிப்பது இறையாண்மை ஆகாது.

இன்று அங்கே நடப்பது, தமிழின அழிப்புத்தானே தவிர, போர் அன்று.

இந்திய அரசு தலையிட்டுப் போரை நிறுத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த விருப்பம். அந்த விருப்பத்தை இந்திய அரசு மயிரளவும் மதிக்கவில்லை. அங்கு கிரிக்கெட் போட்டிக்கு ஆள் அனுப்புகிறது. மேலும் இப்போது அங்கிருந்து வந்து கொண்டிருக்கும் செய்திகளைப் பார்க்கும் போது, பின்னாலிருந்து போரை நடத்துவதே இந்திய அரசும், ஆளும் காங்கிரஸ் கட்சியும்தான் என்று தோன்றுகிறது. உளவுக் கருவிகள், டேங்குகள், ராடார் போன்றவைகளைக் கொடுத்துச் சிறீலங்கா அரசுக்கு உதவியது மட்டுமின்றி, இராணுவ அதிகாரிகளையும் அனுப்பியிருப்பது எவ்வளவு பெரிய கொடுமை? அங்கே புலிகளின் தாக்குதலில் இறந்துபோன அதிகாரிகளில் சிலர் இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நம் அத்தனை பேருக்கும் அவமானம் இல்லையா ?

இன்னொரு முகாமையான செய்தியையும் இங்கு நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.இப்போது அங்கு கொல்லப்படுவது, ஈழ மக்கள் மட்டுமில்லை…அவர்களில் சரி பாதிப் பேர் இந்திய மக்கள். ஆம்… மலையக மக்களில் ஒரு பகுதியினரும் அங்குதான் உள்ளனர்.

பண்டா - சாஸ்திரி ஒப்பந்தத்திற்குப் பின் ஒரு பகுதி மலையக மக்களுக்கு இந்தியாவும், இன்னொரு பகுதி மக்களுக்குச் சிறீலங்காவும் குடியுரிமை வழங்கின. இந்தியக் குடியுரிமை பெற்ற மக்கள், தமிழ்நாட்டில் உதகை மாவட்டத்தில் கூடலூர், கோத்தகிரி, நடுவட்டம் போன்ற பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். இலங்கைக் குடியுரிமை பெற்ற மலையக மக்கள், வவுனியா, கிளிநொச்சிப்பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். இன்னும் பல லட்சக்கணக்கான மலையக மக்கள் நாடற்றவர்களாகவே உள்ளனர் என்பது ஒரு வேதனையான செய்தி.

ஆக, 40 ஆண்டுகளுக்கு முன் கிளிநொச்சிப் பகுதியில் குடியேற்றப்பட்ட, இந்திய வம்சா வழியினரான மலையக மக்கள்தாம் பெரும்பகுதியாக முல்லைத் தீவில் சரண் அடைந்துள்ளனர். அவர்களை அழித்தொழிக்க முயல்வதன் மூலம், இந்திய அரசு தன் சொந்த மக்களையே அழிக்கத் துணை போகிறது என்றுதான் பொருள். அங்கு தஞ்சம் புகுந்துள்ள ஈழ மக்களும், மிக ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள்தாம். ஓரளவு வசதியான மக்களில் பலர் பல ஆண்டுகளுக்கு முன்பே புலம் பெயர்ந்து சென்று விட்டனர். மீதமிருக்கும் ஏழை மக்களான ஈழ மக்களும், மலையக மக்களும்தான் பல்வேறு சித்திரவதைகளுக்கும், படுகொலை களுக்கும் இன்று ஆளாகி அல்லல்படுகின்றனர்.

அந்த இலட்சக்கணக்கான மக்களை புலிகள்தான் பிடித்து வைத்துள்ளனர், கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்பன போன்ற சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகளைச் சிலர் கூறிவருகின்றனர். அதே ஆட்கள்தான், முல்லைத் தீவில் ஆயிரம் புலிகள் மட்டுமே உள்ளனர் என்றும் சொல்கின்றனர். இப்போது இரண்டு கேள்விகள் நம்மிடம் எழுகின்றன. என்னதான் ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றாலும், ஆயிரம் பேர், ஐந்து இலட்சம் மக்களைப் பிடித்து வைத்துக் கொள்ள முடியுமா ? அடுத்ததாக, எறிகணைத் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் பகுதியில், மக்களை எப்படிக் கேடயங்களாகப் பயன்படுத்த முடியும் ? அங்கு என்ன கத்திச் சண்டையா நடைபெறுகிறது ?

எனவே, இப்படிப்பட்ட காரணங்களை எல்லாம் சொல்லிக்கொண்டு, போருக்குத் துணை போவதும், மறைமுகமாகப் போரை நடத்துவதும், காங்கிரசுக் கட்சியைப் படு பாதாளத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். காங்கிரசின் மீது மக்களுக்கு இவ்வளவு வெறுப்பு ஏற்பட்டபின், அக்கட்சியைக் கூட்டணியாக வைத்துக் கொள்வது, ஈரப் பொதியைச் சுமப்பதாக ஆகிவிடும் என்னும் உண்மை, தலைவர் கலைஞருக்குப் புரியாமல் இருக்காது.

இன்றைக்கு எழுந்துள்ள தமிழீழ ஆதரவுச் சூழலை, எதிர்க்கட்சிகள் தி.மு.க.விற்கும், கலைஞருக்கும் எதிராகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. முத்துக்குமார் மரணம் கூட அரசியலாக்கப் படுகிறது என்பது உண்மைதான். அதனால்தான் அஞ்சலி செலுத்த வந்த தி.மு.க. மாவட்டச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அரசு கொடுக்கும் பணம் மறுக்கப்படுகிறது.

இந்நிலைக்கான ஒரே மாற்று, ஈழ ஆதரவை மேலும் வலிவாகத் தன் கையில் கலைஞர் எடுத்துக் கொள்வது மட்டுமே! அவர் முன்வந்து முழங்கிய பின்புதான், மனிதச் சங்கிலி மைல் கணக்கில் நீண்டது. ஐம்பது ஆண்டுகளாக அவர் ஈழ ஆதரவாளராகவே இருக்கிறார் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இப்போது மிக முக்கியமான ஒரு தருணத்தில் நாம் நின்று கொண்டுள்ளோம். ஆளுங்கட்சியாய் இருப்பதில் பல சங்கடங்கள் உண்டுதான். ஆனால் எல்லாவற்றையும் மீறி , ஈழ ஆதரவை அவர் வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. அப்படிச் செய்தால் வரலாறு என்றும் அவரைப் போற்றும்!

இல்லையேல், என் போன்ற கலைஞரின் ஆதரவாளர்களை வரலாறு தூற்றும்.

நன்றி கீற்று

http://www.keetru.com/thamizhar/feb09/suba_veerapandian.php

இலங்கை வானொலியினூடான மறு ஒலிபரப்பை பிபிசி இடைநிறுத்துகிறது
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்த மறு ஒலிபரப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து நடந்து வந்தது.

கடந்த சில மாதங்களாக, பிபிசி தமிழ், சிங்கள மற்றும் பிபிசி ஆங்கில மொழி நிகழ்ச்சிகளின் மறு ஒலிபரப்பு பல முறை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வேண்டுமென்றே வெட்டப்பட்டுவந்தது என்பது இலங்கை நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை 17 முறை தமிழோசை நிகழ்ச்சிகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வெட்டப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பிபிசியின் உயர் நிர்வாகம் மூலமாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது போன்று, நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அல்லது பகுதிகளை இடையில் வெட்டுவது என்பது, பிபிசியின் நிகழ்ச்சிகளின் சுயாதீனத் தன்மையை பாதிப்பதாக அமைகிறது என்பதை பிபிசி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்கு தெளிவாக்கியது.

பிபிசியின் இந்த முயற்சிகளுக்குப் பின்னரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், பிபிசி நிகழ்ச்சிகளை வெட்டிய சம்பவங்கள் கடந்த வாரத்தில் நடந்தன.

இந்த ஒலிபரப்பு இடை நிறுத்தம் குறித்து கருத்துக் கூறிய பிபிசியின் இயக்குநர் நைஜல் சாப்மன், தொடர்ந்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டபோதும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இந்த வெட்டும் நடவடிக்கைகள் தொடர்வது ஏமாற்றமளிப்பதாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

எமது நேயர்களுக்கு செய்திகளை நடுநிலையாக வழங்குவது என்ற நோக்கத்தில் பிபிசி தனது ஒலிபரப்புக்கு முக்கியமானதாகக் கருதும், செய்திச் சுதந்திரம் பக்கசார்பின்மை மற்றும் பல தரப்புக் கருத்துக்களுக்கு இடமளித்தல் போன்ற விழுமியங்களைப் பேணிவருகிறது என்று கூறும் நைஜல் சாப்மன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிபிசியின் நிகழ்ச்சிகளை இடையில் வெட்டாமல் ஒலிபரப்பும் என்ற உத்திரவாதம் தரும்வரை, பிபிசி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலம் ஒலிபரப்புவதை இடை நிறுத்துவது என்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிபிசி நிகழ்ச்சிகள் மீது ஏதும் புகார்கள், குறைபாடுகள் குறிப்பாக இருந்தால் அது குறித்து பிபிசி விசாரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் நைஜல் சாப்மன், ஆனால் இது வரை இந்த மாதிரி எந்தப் புகாரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடமிருந்து வரவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை நேயர்கள் நாளையிலிருந்து எமது நிகழ்ச்சியை சிற்றலை ஒலிபரப்பு மீட்டர் பேண்டுகள், 31ல் 9540 கிலோஹேர்ட்ஸ், 41ல் 7205 கிலோஹெர்ட்ஸ் மற்றும் 49ல் 6135 கிலோஹெர்ட்ஸ் ஆகியவற்றில் கேட்கலாம்.

ஈழத்தமிழர்கள் படும் அவலங்களால் சீர்காழி காங்கிரஸ் வட்டாரத் தலைவர் தீக்குளிப்பு
இதுபற்றி தெரியவருவதாவது:-

சீர்காழி மணல்மேடு பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் வேலை பார்க்கும் ரவிச்சந்திரன் அதிகாலை 2.30 மணிக்கு திடீரென தன் வீட்டிற்கு வெளியே வந்து, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் இட்டபடியே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

ரவிச்சந்திரனின் உரத்த குரலை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனாலும் அதற்குள் ரவிச்சந்திரனின் உடல் 65 சதவீதம் தீக்காயங்களுடன் கருகி விட்டது.

தீக்குளித்த ரவிச்சந்திரனின் உயிரைக் காப்பாற்ற மயிலாடுதுறை அரசு மருத்துவமனிக்கு கொண்டு சென்றனர். அப்போது, ஈழத்தில் தினந்தோறும் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களுக்காகவும் அவர்களுக்கு எதுவும் உதவாத தன் கட்சியை கண்டித்தும் இந்த தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சொல்லியிருக்கிறார் ரவிச்சந்திரன்.

ரவிச்சந்திரனின் தாயார் சாரதாவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவர் மகளிர் காங்கிரஸ் பிரிவு உறுப்பினர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஒருவர் தீக்குளித்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ரவிச்சந்திரன் வாக்குமூலம்

தீக்குளித்த ரவிச்சந்திரன் உயிரைக் காப்பாற்ற மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரவிச்சந்திரன் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் உயிர் பிழைப்பார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கவில்லை. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறை மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தில் நேற்று இரவு டி.வி.பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஈழத்தமிழர்களின் அவலங்களை பார்த்து நெஞ்சு பதைத்தேன். இத்தனை அவலத்திற்கு உள்ளாகியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவ என் கட்சியினர் முன்வரவில்லையே என எனக்கு ஆதங்கமாக இருந்தது.

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அங்கே அப்பாவித்தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தியா நினைத்தால் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் அதற்கான முயற்சியில் இறங்காதது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஈழத்தமிழர்களுக்காக என் உயிரை காணிக்கையாக்குகிறேன்’’ என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

ரவிச்சந்திரன் வீட்டில் தீக்குளிப்பதற்கு முன்பு தினசரி செய்தித்தாள் ஒன்றில் ஈழத்தமிழர்கள் துயரம் தன்னை மிகவும் பாதித்ததாக எழுதி வைத்துள்ளார். கூடவே “தமிழீழம் வாழ்க” என்றும் “ராஜபக்ச ஒழிக” என்றும் முழக்கங்களையும் எழுதி வைத்துள்ளார்

கோத்தபாய, பொன்சேகாவுக்கு எதிராக தமிழ் இன அழிப்பு குற்றச்சாட்டு; அமெரிக்க நீதிமன்றில் புறூஸ் பெயின் வழக்கு தாக்கல்
இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அந்நாட்டின் இராணுவத் தளபதி லெப்.கேணல் சரத்பொன்சேகா ஆகிய இருவர் மீதும், அமெரிக்க நீதிமன்றத்தில் இன அழிப்புக் குற்றம் சுமத்தப்பட்டு, அமெரிக்காவின் முன்னாள் பிரதி உதவி சட்டமா அதிபர் புறூஸ் பெயின் அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் சட்டத்துக்குப் புறம்பான 3,750 கொலைகளைச் செய்தும்,

10,000 பேரை காய முறச்செய்தும்,

13 லட்சம் மக்களை இடம்பெயர வைத்து அவலமுறச்செய்தும்,

குற்றமிழைத்துள்ளார்கள் என்பவை உட்பட பன்னிரெண்டு குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க சட்டமா அதிபரிடமும் நீதி அமைச்சிடமும் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்டன.

அமெரிக்காவின் இன அழிப்புக்குப் பொறுப்புக் கூறும் சட்டத்தின் (G.A.A) கீழ் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களையும் அமெரிக்காவின் முன்னாள் பிரதி உதவி சட்டமா அதிபர் புறூஸ் பெயின் தாக்கல் செய்தார்.

தமக்கு கீழ் பணியாற்றும் பாதுகாப்புப் படையினர் செய்த இன அழிப்புக் கொலைகளை, பாதுகாப்புச் செயலாளரும், இராணுவத் தளபதியுமே உத்தரவிட்டுச் செய்வித்தார்கள் என்பதால், அவர்களே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று வழக்குத்தொடருநரான புறூஸ் பெயின் தமது மனுவில் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவரங்களை புறூஸ் பெயின் அசோசியேட்ஸ் நிறுவனம் நேற்று வாஷிங்ரனில் வெளியிட்டது.

இலங்கையின் பன்னிரண்டு மாவட்டங்களில் 2005 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் (சம்பந்தப்பட்ட இருவரும் தமது அரசாங்கப் பதவிகளை பொறுப்பேற்ற நாள் தொடக்கம்) வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நாள் வரை இடம்பெற்ற சட்டத்துக்கு முரணான 3,750 கொலைகளுக்கும் 10,000 பேர் உடல் ரீதியான உபாதைகளுக்கு ஆளாவதற்கும் 13 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து அவலப்படுவதற்கும் இவர்கள் இருவருமே காரணமானவர்கள், பொறுப்பாளிகள் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த எண்ணிக்கைகள், முன்னாள் யுகோஸ்லாவிய ஜனாதிபதி ஏற்படுத்திய இடப்பெயர்வுகளினால் கொசோவாவில் உண்டான இன அழிப்பு எண்ணிக்கையை விட மிகவும் அதிகமானதாகும் எனவும் மனுவில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தினால் 2007 ஆம் ஆண்டு அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட இன அழிப்பு பொறுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்படும் முதலாவது வழக்கு இதுவாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜை என்பதாலும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா “கிறீன் காட்” பெற்றவர் என்பதாலும் அவர்கள் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடர முடியும் என்றும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

இன அழிப்புக்கு எதிரான தமிழர் இயக்கம், தமிழர் சட்ட பாதுகாப்பு நிதியம் ஆகியவற்றின் சார்பிலேயே புறூஸ் பெயின் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்?
இராணுவ பலத்தின் மூலம் தமிழ் மக்கள் இரண்டாம் தரக் குடிகள் என்ற நிலையை யாரும் கேட்பாரின்றி உறுதி செய்கிறது சிங்கள பேரினவாத அரசு. இந்த அநீதியான போருக்கு எந்த சர்வதேசத் தடையும் இல்லையென கொக்கரிக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. தடை இல்லையென்பதோடு ஆயுத உதவியும் ஆதரவும் கூட இந்த சர்வதேச அங்கீகாரத்தில் அடங்கியிருக்கிறது. புலிகளின் விமானத் தாக்குதலால் காயமடைந்த இந்திய இராணுவ நிபுணர்கள் மூலமாக இந்தியாவும் இந்த இனவெறிப் போரில் கலந்து கொண்டிருப்பது அம்பலமானது. ஆனாலும் இது குறித்து மவனம் சாதிக்கிறது மன்மோகன் அரசு.

ஆனால் ராஜபக்ஷே ஆர்ப்பட்டமாய் முழங்குகிறார், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா சொல்லவில்லை என்று ! அரசாங்ககளுக்கிடையில் இப்படி புரிந்துணர்வு வெளிப்படையாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மீண்டும் ஈழம் குறித்த கவலை - முன்பு போல இல்லையென்றாலும் - எழுந்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதம், வைகோவின் ஆர்ப்பாட்டம், திரையுலகின் ராமேஸ்வரத்து கூட்டம், தி.மு.கவின் மனித சங்கிலி, அப்புறம் கருணாநிதியின் ராஜினாமா மிரட்டல்….தொட்டுவிடும் தூரத்திலிருக்கும் ஈழத்தின் அலறல் தமிழகத்தை இலேசாக உலுப்பியிருப்பது உண்மைதான்.

எழும்பியிருக்கும் இந்த உணர்வு உண்மையிலேயே ஈழத்தின் அவலத்தை துடைக்கும் வல்லமை கொண்டிருக்கிறதா என்பதுதான் நம்முன் உள்ள பிரச்சினை. தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும், தமிழின ஆர்வலர்களும் ஒட்டுமொத்தமாக முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் ‘இந்தியா தலையிடவேண்டும், போரை நிறுத்த வேண்டும்’ என்பதே! ஈழத்துப் பிரச்சினையில் இந்தியா நடுநிலைமை வகிப்பது போலவும் இக்கோரிக்கையை வற்புறுத்தினால் போரை நிறுத்தி ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலளிக்கலாம் என்பதும்தான் இந்த கோரிக்கையின் உட்கிடை.

இந்தியா அல்லது இந்திய அரசு என்பது என்ன? இது நாட்டையும் மக்களையும் மட்டும் குறிக்கவில்லை. இந்திய ஆளும்வர்க்கத்தின் அல்லது முதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகாரவர்க்கத்தின் நலனைத்தான் இந்த அரசு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்திய முதலாளிகள் மற்றும் அதிகாரவர்க்கம் கோரும் நலன்தான் இந்தியாவின் அயுலறவுக் கொள்கைகளை வழிநடத்தும். அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பை எதிர்க்காமல் இருப்பதோ, ஈரானுக்கெதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஆதரிப்பதோ, அணு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் அடிமையாகத் நெளிவதோ இப்படித்தான் நடந்தது. அமெரிக்காவின் ஆசியுடன் தெற்காசியாவின் பிராந்திய வல்லராசகத் திகழவேண்டும், அதை ஒரு பொருளாதார வர்த்தக வலையமாக மாற்றி சந்தையை இந்திய தரகு முதலாளிகளுக்கு திறந்துவிடவேண்டுமெ என்பதுதான் இந்தியாவின் இலக்கு. இந்த நோக்குதான் இந்திய இலங்கை உறவை வழிநடத்துகிறதேயன்றி அடிபட்டுச் சாகும் ஈழத் தமிழ் மக்களின் அவலமல்ல. ஒரு ஐம்பதாண்டு இந்திய இலங்கை உறவின் வரலாற்றைப் பார்க்கும்போது இந்த ராஜாங்க ரகசியம் புலப்படும்.

60களில் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தப்படி ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையக இந்திய தமிழர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கையின் தேயிலைத் தோட்டங்களை உழைத்தும் உயிரைக்கொடுத்தும் உருவாக்கிய தொழிலாளிகள் ஒரிரவில் அனாதைகளாக மாற்றப்பட்டு இந்தியாவிற்கு விரட்டப்பட்டனர். இந்தப் பிரச்சினையில் தமிழ்மக்களின் நலனுக்கு ஆதரவாக இந்தியா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? பாகிஸ்தான், சீனப்போர்களைத் தொடர்ந்து அன்று இந்தியாவுக்கு இலங்கையின் ஆதரவு தேவைப்பட்டதால் இந்த அநீதியான கோரிக்கை ஏற்கப்பட்டது. இந்தியாவின் நலனுக்காக தமிழனின் வாழ்க்கை சூறையாடப்பட்டது. இதுதான் மலையக இந்தியத் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்ட கதை!

70களில் இலங்கையில் இப்போது சிங்கள இனவெறிக் கட்சியாக சீரழிந்துபோன ஜனதா விமுக்தி பெரமுனா என்ற ஜே.வி.பி கட்சி ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடத்தியபோது அதை அடக்குவதற்கு இந்தியா படையும், ஆயுத உதவியும் செய்தது. ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்போது “இலங்கையின் இறையாண்மையில் தலையீடு செய்யமாட்டோம்” என்று காங்கிரசு கட்சி அறிவிக்கிறதே அப்போது மட்டும் இந்தத் தலையிடாமைக் கொள்கை எங்கே போயிற்று? இலங்கையை தொடர்ந்து தனது செல்வாக்கில் வைத்திருக்கவே இந்திய அரசு இந்த உதவியைச் செய்தது.

அதன் பிறகு பாகிஸ்தானைத் துண்டாடி வங்கதேசத்தை உருவாக்க இந்திய இராணுவம் தலையிட்டது. அன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசைச் சரிக்கட்டிக் கொள்வதற்காக கச்சத்தீவு இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டது. இதுவும் இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமாகும். பெரிய தீவை தனது செல்வாக்கில் வைக்க சிறிய தீவு தாரைவார்க்கப்பட்டது. இன்றைக்கு கச்சத்தீவருகே மீன் பிடிக்கும் தமிழகத்து மீனவர்கள் காக்கை குருவி போல இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதற்கு இதுதானே அச்சாரம்?

83 ஜூலைக் கலவரத்திற்குப் பிறகு ஈழத்தில் போராளிக் குழுக்கள் தலையெடுத்த போது அந்தக் குழுக்களுக்கு இராணுவப்பயிற்சி அளித்து, ஆயுத உதவியும் செய்து ஆதரித்தது இந்திரா அரசாங்கம். இதையும் ‘ஈழ விடுதலைக்கு இந்தியா செய்த உதவி’ என்று இன்றைக்கும் உளறுபவர்கள் இருக்கின்றனர். இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் ஈழம் விடுதலை அடைந்திருக்கும் என்று பேசித்திரியும் புத்திசாலிகளும் இருக்கிறார்கள்.

கச்சத்தீவைக் கொடுத்ததும், மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்ததும் இலங்கைக்கு இந்தியா வழங்கிய சலுகைகள். 83 இல் போராளிகளை ஸ்பான்சர் செய்தது மிரட்டல்!

இரண்டு எதிரெதிதர் நிலைகளும் ஒரே நோக்கத்துக்காகத்தான். அன்று ரசிய ஆதரவு முகாமில் இந்தியா இருந்ததும், இலங்கை அமெரிக்க ஆதரவு முகாமிலும் இருந்தது. உலகு தழுவிய பனிப்போர் சூழலில்தான் இந்த ‘ஸ்பான்சர்ஷிப் முடிவு’ எடுக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இலங்கையை மிரட்டி தனது செல்வாக்கில் வைத்திருக்கும் பொருட்டே இந்திரா காந்தி போராளிக் குழுக்களுக்கு உதவி செய்தார். நிச்சயமாக இது ஈழத்தமிழரின் விடுதலைக்காக செய்யப்பட்டதில்லை. மேலும் இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தின் மாற்றமுடியாத வடுவாய் பதிந்திருக்கும் பல சீரழிவுகளுக்கும் இந்திராவின் இந்த ஸ்பான்சர் புரட்சி வழி ஏற்படுத்தியிருக்கிறது. குறுக்கு வழியில் விடுதலையை சாதிக்கலாம் என்ற பிரமையை ஈழத்தின் இளைஞர்களுக்குக் கற்றுத்தந்த இந்திய உளவுத் துறை, அதன் பொருட்டு பணம் சம்பாதிப்பதற்காக போதைப்பொருள் கடத்துவது, சக குழுக்களை அழிப்பது போன்ற சதிகளையும் சொல்லிக் கொடுத்தது. எம்.ஜி.ஆரின் ஆதரவு பெற்ற விடுதலைப் புலிகள் தமது இருப்பை மட்டும் உறுதி செய்வதற்கு மற்ற குழுக்களை ஈவிரக்கமின்றி துடைத்தழித்தனர். இப்படியாக தனது தெற்காசிய மேலாதிக்க நோக்கத்துக்காக இந்திய ஆளும் வர்க்கம் நடத்திய சூதாட்டத்தில், ஈழத்தின் எதிர்காலம் பகடைக்காய் ஆக்கப்பட்டது.

ஒரு நாட்டின் விடுதலையும், புரட்சியும் இன்னொரு நாட்டின் ஆளும் வர்க்கத்தின் தயவில் நடைபெற முடியாது என்பதற்கு ஈழம் எடுப்பான எடுத்துக்காட்டாகும். அன்றைக்கு ஈழத்தின் போராளிக்குழுக்களை இந்திய உளவுத் துறைகள்தான் வழிநடத்தின என்பதிலிருந்து அந்தக்குழுக்களின் அரசியல் தரத்தை புரிந்து கொள்ளமுடியும். முக்கியமாக சொந்தநாட்டின் மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் தேவையை, நிர்ப்பந்தத்தை இந்த குறுக்கு வழி ரத்து செய்து விட்டது.

இப்படி இந்தியாவால் மிரட்டப்பட்ட இலங்கை, அன்று ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டை ஏற்றுக்கொண்டது. இதுவும் தொலைநோக்கில் இந்தியாவை ஈழ விடுதலைக்கு எதிராக நிறுத்துவதற்கு உதவும் என்று ஜெயவர்த்தனே-பிரேமதாசா கும்பல் புரிந்து கொண்டது. இந்திராவின் மரணத்திற்கு பிறகு இந்தி சினிமா ஹீரோவைப் போல வந்திறங்கிய ராஜீவ், ஈழத்தமிழர்கள் சார்பில் இலங்கையுடன் ஒப்பந்தம் போட்டார். அதை வைத்து இலங்கையை நிரந்தரமாக இந்தியாவின் செல்வாக்கில் வைத்துக் கொள்ளலாம் எனவும் இந்திய ஆளும் வர்க்கம் கணக்குப் போட்டது. இதே ஒப்பந்தத்தை வைத்து ஈழவிடுதலைக்கு எதிராக இந்தியாவை நிறுத்தும் வழியை யோசித்தார் ஜெயவர்த்தனே.

திம்பு பேச்சுவார்த்தையின் அடிப்படைகள் மறுக்கப்பட்டு ஒரு அடிமை ஒப்பந்தம் ராஜீவ் - ஜெயவர்த்தனே கும்பலால் ஈழமக்கள் மீது திணிக்கப்பட்டது. இந்திய முதலாளிகளின் நலனுக்காக அந்த ஒப்பந்தத்தை தீட்சித், இந்து ராம், பார்த்தசாரதி, பண்ருட்டி ராமச்சந்திரன் முதலானோர் அடங்கிய கூட்டம் வடிவமைத்தது. அதை அமல் படுத்தும் சாக்கில் தெற்காசிய நாட்டாமையின் இராணுவம் இலங்கையில் இறங்கியது. விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்தியாவின் வற்புறுத்தலால் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற குழுக்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமனதோடு ஆதரித்து ஈழமக்களுக்கு துரோகமிழைத்தன. ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை இந்தியாவின் தலையில் கட்டியதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்திய ராணுவத்தை திருப்புவதில் வெற்றிபெற்றது இலங்கை அரசு.

இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் புலிகளின் போர் துவங்கியது. சில நாட்களில் புலிகளை முடித்துவிடலாம் என்று அதிகரா வர்க்கத்தால் தவறாக வழிநடத்தப்பட்ட இந்திய ராணுவம் 1500 வீரர்களைப் பலி கொடுத்தது. போரில் வெல்ல முடியாத ஆத்திரத்தை அப்பாவி தமிழ் மக்களை கொல்வதிலும், பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதிலும் தீர்த்துக் கொண்டது. இறுதியில் மூக்கறுபட்ட இந்திய ராணுவம் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது இந்தியா திரும்பியது. அதன் பின் ராஜிவ் கொலை செய்யப்பட்டார். இதை வைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்து தடை செய்து தமிழ் நாட்டில் ஈழம் என்று சொன்னாலே கைது செய்யப்படும் நிலை உருவாக்கப்பட்டது.

ராஜிவ் கொலையின் காரணமாகத்தான் இந்திய அரசு ஈழத்திற்கு எதிரான நிலைக்குச் சென்று விட்டதாகப் பலரும் பேசுகின்றனர். இது கடைந்தெடுத்த பொய்யாகும். சோ, சுப்ரமணியசுவாமி, ஜெயலலிதா, இந்து ராம் போன்ற பார்ப்பனர்கள் கூட்டமும் ஊடகங்களும் ஈழப் போராட்டத்துக்கு எதிராக நஞ்சைக் கக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், ராஜீவின் மரணத்தை மிகப்பெரிய தேசிய அவமானமாக சித்தரித்துக் குமுறுகிறார்கள்.

இலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ஒரு சிங்கள சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் தாக்கினான். அதுவும் கூட கொலை முயற்சிதான். இதற்காக இந்தியா இலங்கை மீது படையெடுத்ததா என்ன? அல்லது அந்த சிப்பாயைத் தூக்கில் போட்டு விட்டார்களா? இரண்டுமில்லை. அந்த சிப்பாய் தண்டனைக்காலம் முடிந்து தற்போது வெளியே வந்துவிட்டான். ராஜீவ் கொலை செய்யப்படாவிட்டாலும் புலிகள் விசயத்தில் இந்தியா இதே நிலையைத்தான் எடுத்திருக்கும்.

“தமிழர்கள் படற துன்பத்தைப் பார்த்து, ஏதோ நல்லது பண்லாம்னு எங்க ராஜீவ் காந்தி முயற்சி பண்ணாரு. அவரையே கொன்னுட்டீங்க, இனிமே நீங்க எக்கேடு கெட்டுப் போங்கப்பா. உங்க சங்காத்தமே வேணாம்” என்று இந்தியா மனம் வெறுத்து ஒதுங்கி விட்டதைப் போல காங்கிரஸ்காரர்கள் பேசுவதைக் கேட்கையில் ரத்தம் கொதிக்கிறது. “ஏதோ நடந்தது நடந்து போச்சு, அதை மனசுல வச்சுக்காதீங்க, நீங்க தலையிட்டு பாத்து செஞ்சாதான் உண்டு” என்ற பாணியில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இந்திய அரசிடம் மன்றாடுவதைப் பார்க்கும் போதோ குமட்டுகிறது.

அப்படியெல்லாம் ‘மனம் நொந்து’ இந்தியா எந்தக் காலத்திலும் ஒதுங்கி விடவில்லை. எனவேதான் அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி கொடுப்பதையும், ஆயுதங்கள் தருவதையும் இந்தியா தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால், இந்திய மேலாதிக்க நோக்கத்துக்கு அது அவசியம்.

காஷ்மீரிலும், வடகிழக்கிலும் தேசிய இனப் போராட்டங்களை ஒடுக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்குமா? தனது மேலாதிக்க நலனுக்காக தமிழக மீனவர்களை ஆண்டு தோறும் இலங்கைக் கடற்படைக்கு காவு கொடுத்து வரும் அரசு, ஈழத்தமிழனின் உயிரைக் காப்பாற்றுமா?

புலிகள் ஈழம் கேட்கிறார்கள். இந்திய ஆளும் வர்க்கமோ தெற்காசியாவைக் கேட்கிறது. இதில் எந்தக் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார் மன்மோகன் சிங்? சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் அவர் பேசியதைப் படித்துப் பாருங்கள். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பூடான் அனைத்தையும் சேர்த்து தெற்காசிய சுதந்திரப் பொருளாதார மண்டலமாக்கி, எல்லா நாடுகளுக்கும் சேர்த்து ஒரே நாணயத்தையும் கொண்டு வரவேண்டும் என்பதுதான் மன்மோகன் பேச்சின் மையப்பொருள்.

உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாகப் பணக்கொழுப்பு பெருகி ‘சந்தை … சந்தை’ என்று தினவெடுத்துத் திரியும் அம்பானிக்கும், டாடாவுக்கும், மித்தலுக்கும் தெற்காசியாவை வாங்கித் தருவதற்கு இந்திய அரசு வேலை செய்யுமா, தமிழர்களுக்கு ஈழம் வாங்கித் தருவதற்கு வேலை செய்யுமா?

“வங்காளிகளுக்கு பங்களாதேஷ் வாங்கிக் கொடுக்கவில்லையா?” என்கிறார் கருணாநிதி. “அண்ணனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தியே, எனக்கு மட்டும் ஏன் சாக்லெட் வாங்கிக் கொடுக்க மாட்டேங்கிறே?” என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்வி இது. அன்றும் வங்காளிகளுக்கு தனி நாடு பெற்றுத்தருவது இந்திய அரசின் நோக்கமாக இருக்கவில்லை. பாகிஸ்தானை உடைப்பதுதான் அன்று இந்தியாவின் நோக்கம். நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் பொசிந்தது - வங்காள தேசம் பிறந்தது. புல்லுக்கு நீர் இரைப்பது இந்தியாவின் நோக்கமாக அன்றைக்கும் இல்லை. இன்றைக்கும் இல்லை.

“இலங்கைக்கு பாகிஸ்தானும், சீனாவும் ஆயுதம் கொடுக்கிறார்கள். அதைத் தடுத்து இலங்கையை நம் கண்ட்ரோலுக்குக் கொண்டு வரவேண்டுமானால், நாம் ஆயுதம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்பதுதான் இந்திய மேலாதிக்கத்தை நியாயப்படுத்த வெளியுறவுத் துறை அதிகாரிகள் முன்வைக்கும் வாதம். “அப்படி நீங்கள் கொடுத்தாலும் எசமானே, சிங்களவன் உங்களுக்கு விசுவாசமாக இருக்கமாட்டான். தமிழன்தான் விசுவாசமாக இருப்பான். பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையில் இறங்கிவிட்டால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து. எனவே இந்தியாவின் பாதுகாப்புக்காகவாவது தமிழ் ஈழத்தை ஆதரியுங்கள்” என்பது இங்குள்ள சில தமிழ் உணர்வாளர்களின் எதிர்வாதம். இது எதிர்வாதமல்ல, அதே வாதம்தான் என்பது கூட அவர்களுக்குப் புரியவில்லை. சிங்கள அடிமைத்தனத்துக்கு மாற்றாக இந்திய அடிமைத்தனத்தை சிபாரிசு செய்யும் இந்தக் கோரிக்கை எவ்வளவு ஆபாசமாக இருக்கிறது என்பது உரைக்கவுமில்லை.

“இதெல்லாம் ஒரு தந்திரம். நாங்கள் இந்திய அரசிடம் ஏமாந்து விடுவோமா என்ன” என்று இந்தப் புத்திசாலிகள் நம்முடைய காதில் கிசுகிசுக்கிறார்கள். இதே வசனத்தைத் தான் இந்திய உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகள் 1983 இல் பேசினார்கள். கேட்டோம். தந்திரத்தில் வென்றது யார் என்பதையும் அனுபவத்தில் கண்டு விட்டோம். மறுபடியும் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் அதே தந்திரம்!

நம்முடைய தமிழ் உணர்வாளர்களுக்குக் கம்யூனிசத்தைக் கட்டோடு பிடிக்காது என்பது தெரிந்த கதை. இருந்தாலும் தொடர்ந்து வங்காளதேசத்தை உதாரணம் காட்டும் அவர்கள் ஒரு மாற்றத்துக்கு நேபாளத்தைப் பார்க்கலாமே! ‘நேபாளத்தில் மன்னராட்சி தொடரவேண்டும்’ என்பதற்காக இந்தியா செய்யாத தகிடுதத்தங்கள் இல்லை. நேபாளத்துக்கு ஆயுத சப்ளை இந்தியாவும், அமெரிக்காவும்தான். மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தை நசுக்க ஆன உதவிகளையெல்லாம் இந்தியா செய்தது. பிறகு ‘மாவோயிஸ்டுகளுடன் சேராதீர்கள்’ என்று ஏழு கட்சிக் கூட்டணியை மிரட்டியது, தாஜா செய்தது. கூட்டணி அமைந்த பிறகு அதனை உடைக்க கொய்ராலாவைத் தூண்டி விட்டது. இலட்சக்கணக்கான மக்கள் அரண்மனையை முற்றுகையிட்டு முழங்கிக் கொண்டிருந்த அந்தத் தருணத்திலும், முன்னாள் காஷ்மீர் மன்னர் கரண்சிங்கை அனுப்பி, மன்னராட்சியைப் பாதுகாக்க பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது. பிறகு தேர்தலில் மாவோயிஸ்டுகளைத் தோற்கடிக்க தெராய் பகுதியில் தனிநாடு கோரிக்கையைத் தூண்டி விட்டு அவர்ளுக்கு ஆயுதமும் கொடுத்தது.

ஜனநாயகத்துக்கு எதிராக மன்னராட்சியை ஆதரிப்பதற்கு இந்திய ஆளும் வர்க்கம் கூறிய விளக்கம் என்ன? “நாம் மன்னராட்சியை ஆதரிக்காவிட்டால், நேபாள மன்னர் சீனாவின் பக்கம் சாய்ந்துவிடுவார்”. இந்த விளக்கத்தின் சொற்களை மட்டும் மாற்றிப் பாருங்கள். “நாம் சிங்கள அரசை ஆதரிக்காவிட்டால் அவர்கள் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து விடுவார்கள்”.

இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசின் கொள்கையைத் தீர்மானிக்கும் மேலாதிக்கக் கண்ணோட்டம் இப்படித்தான் தனது விளக்கத்தைக் கூறி வந்திருக்கிறது. இந்த விளக்கத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டுமானால், உடம்பில் ஜனநாயக ரத்தம் ஓட வேண்டும். வெறும் தமிழ் ரத்தம் மட்டும் ஓடும் தமிழர்களால் மேலாதிக்கத்தை எதிர்க்க முடியாது.

“எங்களை ஆதரியுங்கள். மன்னரைக் காட்டிலும் இந்திய அரசுக்கு விசுவாசமாக நாங்கள் நடந்து கொள்கிறோம்” என்று நேபாள மாவோயிஸ்டுகள் தமது நாட்டின் விடுதலைக்காக இந்தியாவிடம் இறைஞ்சவில்லை. புலிகளைப் போல நவீன ஆயுதங்கள், விமானப்படை, புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவி, வானொலி, வானொளி .. எதுவும் அவர்களிடம் இல்லை.

ஈழத் தமிழனின் விடுதலை பற்றி எங்களைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது என்று மற்றவர்களின் குரல்வளையை நெறித்த ‘வீரமும்’ அவர்களிடம் இல்லை. மிகவும் முக்கியமாக, நேபாள விடுதலைக்குக் குரல் கொடுப்பதற்காக, வீடணர் படையொன்றை இந்தியாவில் அவர்கள் உருவாக்கி வைத்துக் கொள்ளவில்லை. ஒருவேளை, இத்தகைய ராஜ ‘தந்திரங்கள்’ தெரியாத காரணத்தினால்தான் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்களோ!

தந்திரங்களால் எந்த நாடும் விடுதலை அடைய முடியாது. அப்படி அடைந்து விட்டதாகக் கூறிக்கொண்டாலும் அது விடுதலையாக இருக்காது. எனவே, ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க எண்ணும் தமிழகத்து மக்கள் இந்திய மேலாதிக்கத்தை தயவு தாட்சண்யமின்றி அம்பலப்படுத்த வேண்டும். ஈழத் தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். இது இரண்டையும் பேசாமல், எவ்வளவு பெரிய சங்கிலி அமைத்தாலும் அது ஈழத்தமிழ் மக்களின் அடிமைச் சங்கிலியை அறுக்க உதவாது.

குறிப்பு:

‘இலங்கையில் இந்தியாவின் நலன்கள்’ என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள் பலருக்குப் புரிவதில்லை. இலங்கையில் டாடாவுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் எவ்வளவு, டி.வி.எஸ், மகிந்திரா, பஜாஜ் வாகனங்களின் சந்தை எவ்வளவு, எண்ணெய்க் குதங்கள் எத்தனை, இன்னும் தனியார் துறை-பொதுத்துறை நலன்கள் என்னென்ன என்ற விவரங்களை ஈழத்தமிழ் வாசகர்கள் அறியத் தந்தால் இந்தியத் தமிழர்களின் மயக்கத்தைத் தெளிவிக்க உதவியாக இருக்கும்.

இந்திய அமைதிப்படை ஈழத்தில் ஆற்றிய அமைதிப் பணிகள், இந்திய உளவுத் துறையால் சீர்குலைக்கப்பட்ட ஈழப் போராட்டத்தின் கதைகள் ஆகியவற்றையும் நினைவு படுத்தினால், பாரத மாதா பக்தர்கள் கொஞ்சம் புத்தி தெளியக்கூடும்.

“நேபாள மாவோயிஸ்டுகள் இப்போது இந்தியாவைத் தொழில் தொடங்க அழைக்கவில்லையா?”

என்பன போன்ற கேள்விகளுடன் எதிர்வாதத்துக்கு சில பதிவர்கள் தயாராக இருக்கக் கூடும். முதலில் கூரையேறி கோழி பிடிக்கும் கதையைப் பேசுவோம். ‘வானமேறி வைகுந்தம் போகும் வழி’ பற்றி அப்புறம் விவாதிக்கலாம்.(நன்றி:vinavu.wordpress)

இந்திரன் ஆன் ஸ்போட் ஷூட்டிங் புகைப்படங்கள்
இந்திரன் ஆன் ஸ்போட் ஷூட்டிங் புகைப்படங்கள்