Archive for 'செய்திகள்'

இது உண்மையாக இருந்தால், புலிகள் செய்ய வேண்டியது

புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 750 படையினரை மீட்டுத்தருமாறு பெற்றோர் ஐ.சி.ஆர்.சியிடம் கோரிக்கை
1)தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள ராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும். இனி இப்படியானதொரு ஆக்கிரமிப்பை ஒரு நாளும் மேற்கொள்ள கூடாது.
2)தமிழர்களை கொல்வது நிறுத்தப்பட வேண்டும்
3)தமிழர்களை கொன்றதற்கு ராசபக்சே பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். தமீழீழ குற்றவாளி கூண்டில் ராசபக்சே ஏற்றப்பட வேண்டும். அதை தமீழீழ நீதித்துறை விசாரணை செய்ய வேண்டும்.
4)தமிழர்களை இனி கொல்ல மாட்டேன் என்ற ஒப்பத்தில் கையொப்பமிட வேண்டும்.
5)முதலில் 50 பேரை விடுதலை செய்யலாம், எப்படி [...]

Full Story

இலங்கை வானொலியினூடான மறு ஒலிபரப்பை பிபிசி இடைநிறுத்துகிறது

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்த மறு ஒலிபரப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து நடந்து வந்தது.
கடந்த சில மாதங்களாக, பிபிசி தமிழ், சிங்கள மற்றும் பிபிசி ஆங்கில மொழி நிகழ்ச்சிகளின் மறு ஒலிபரப்பு பல முறை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வேண்டுமென்றே வெட்டப்பட்டுவந்தது என்பது இலங்கை நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை 17 முறை தமிழோசை நிகழ்ச்சிகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வெட்டப்பட்டு வந்த நிலையில், இது [...]

Full Story

ஈழத்தமிழர்கள் படும் அவலங்களால் சீர்காழி காங்கிரஸ் வட்டாரத் தலைவர் தீக்குளிப்பு

இதுபற்றி தெரியவருவதாவது:-
சீர்காழி மணல்மேடு பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் வேலை பார்க்கும் ரவிச்சந்திரன் அதிகாலை 2.30 மணிக்கு திடீரென தன் வீட்டிற்கு வெளியே வந்து, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் இட்டபடியே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
ரவிச்சந்திரனின் உரத்த குரலை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனாலும் அதற்குள் ரவிச்சந்திரனின் உடல் 65 சதவீதம் தீக்காயங்களுடன் கருகி விட்டது.
தீக்குளித்த ரவிச்சந்திரனின் உயிரைக் காப்பாற்ற மயிலாடுதுறை அரசு மருத்துவமனிக்கு கொண்டு சென்றனர். அப்போது, [...]

Full Story

கோத்தபாய, பொன்சேகாவுக்கு எதிராக தமிழ் இன அழிப்பு குற்றச்சாட்டு; அமெரிக்க நீதிமன்றில் புறூஸ் பெயின் வழக்கு தாக்கல்

இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அந்நாட்டின் இராணுவத் தளபதி லெப்.கேணல் சரத்பொன்சேகா ஆகிய இருவர் மீதும், அமெரிக்க நீதிமன்றத்தில் இன அழிப்புக் குற்றம் சுமத்தப்பட்டு, அமெரிக்காவின் முன்னாள் பிரதி உதவி சட்டமா அதிபர் புறூஸ் பெயின் அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் சட்டத்துக்குப் புறம்பான 3,750 கொலைகளைச் செய்தும்,
10,000 பேரை காய முறச்செய்தும்,
13 லட்சம் மக்களை இடம்பெயர வைத்து அவலமுறச்செய்தும்,
குற்றமிழைத்துள்ளார்கள் என்பவை உட்பட பன்னிரெண்டு குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க சட்டமா அதிபரிடமும் நீதி அமைச்சிடமும் [...]

Full Story

விளம்பர துண்டு பிரசுரமாகும் ரூபாய் நோட்டுகள்

விளம்பர துண்டு பிரசுரமாகும் ரூபாய் நோட்டுகள்
திருநெல்வேலி, பிப். 2: ரூபாய் நோட்டுகளில் விளம்பரங்களை அச்சிட்டு ஆதாயம் தேடிக் கொள்ளும் செயல் தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
பாமர மக்களின் தவறான உபயோகத்தால் ரூபாய் நோட்டுகள் அழுக்கடைந்து, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்னரே காலாவதியாவது ஒருகாலத்தில் பெரும் பிரச்னையாக இருந்து வந்தது.
இதையடுத்து, ரூபாய் நோட்டுகளில் “பின்’ அடிக்கக் கூடாது, எழுதக் கூடாது என கடுமையான சில விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன் பின்னர், அதுபோன்ற செயல்கள் பெருமளவு குறைந்தன.
தற்போது சிறு, [...]

Full Story

இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 காயமடைந்துள்ளனர்

மேலும், இப்போது, சிறிலங்கா படையினர் பாவிக்கும் பீரங்கிக் குண்டுகள் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் ஒரு வகை எரிகுண்டுகளாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களும், மேலும் 10 ஆயிரம் வரையான ஏற்கெனவே குடியிருந்த மக்களும் வாழ்ந்து வந்த சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை வரை சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இன்றைய இந்த தாக்குதலில்55 தமிழர்கள் படுகொலை [...]

Full Story

கிழக்கு மாகாண சபையை அவமதித்த முரளிதரன் எம்பியை கட்சியில் இருந்து நீக்குவதற்கு ரிஎம்விபியின் மத்திய குழு முடிவு

கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த பாராளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரன் எம்பி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ தலைவரும் கிழக்கு மாகாண சபையின் மான்புமிகு முதலமைச்சருமான திரு. சி. சந்திரகாந்தன் அவர்களை விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவானது இன்று நண்பகல் கட்சியின் செயலகத்தில் அவசரமாக ஒன்று கூடியது.

கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை உத்தியோகபூர்வமாக தலைவர் அவர்கள் ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவானது முரளிதரன் எம்பியால் ஆங்கில ஊடகமொன்றில் இன்று (03-01-2009) வெளியான பேட்டியில் [...]

Full Story

ஈழத்தமிழர்க்கான உயிர் திறந்த மூன்றாவது தியாகி - ஜெகதேசன்

நேற்று திங்கக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் மலேசியாவின் ஜொகூர் மாநிலம் தாமான் புத்ரி வங்சா. புக்கிட் ஜெயாவைச் சேர்ந்த 29 அகவையுடைய
ஸ்டீபன் ஜெகதேசன் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுமை ஊர்திச் சாரதியாக தொழில்புரிந்து வந்த ஸ்டீபன் கடந்த 10 நாட்களாக பித்து பிடித்தவர்கள் போல் காணப்பட்டதாகவும் இலங்கையில், ஈழத்தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுவது குறித்து நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை படித்து மிகவும் கவலை கொண்டிருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் முத்துகுமார் [...]

Full Story

வெளிநாட்டில் வாழும் தமது குடிமக்களிடம் 500 மில்லியன் டொலர் நிதியுதவி கோருகிறது சிறிலங்கா அரசு

சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு என வெளிநாட்டில் வாழும் சிறிலங்கா மக்களிடம் 500 மில்லியன் டொலர் நிதித் தொகையை சேகரிக்கத் திட்டமிட்டிருப்பதாக சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அரை மில்லியனில் இருந்து ஒன்றரை மில்லியன் டொலர்கள் வரை, வெளிநாட்டில் வாழும் சிறிலங்கா மக்களிடம் நிதி சேகரிக்க முடியும் என நம்புவதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் வீழ்ச்சி காரணமாக, நாட்டின் அபிவிருத்தி பெரிதும் பாதிப்படைந்திருப்பதாகத் தெரிவித்த அவர், [...]

Full Story

புலிகளின் கட்டுப் பாட்டுப்பகுதி மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது: சிறிலங்கா அரசு அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொடர்ந்தும் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை சிறிலங்கா தேசிய பாதுகாப்பு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முல்லைத்தீவின் வடக்குப் பகுதியில் 35 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தை ‘பாதுகாப்பு வலயமாக’ அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்களை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தது.
இதன் மூலம் எமது பகுதிகளுக்கு வந்த மக்களுக்கு [...]

Full Story