Archive for 'கட்டுரைகள்'

“ராஜபக்சே நாசமா போவான்” சபிக்கும் தமிழகம் நக்கீரன்

இதுக்கு மேலே ஒரு அநியாயம் உலகத்திலேயே இருக்க முடியாதுங்க. எத்தனை குழந்தைங்களை குண்டு போட்டுக் கொல்லுறாங்க. எத்தனை பொம்பளைங்களை சீரழிக்கிறாங்க. வீட்டையும் இழந்து, காட்டிலும் இருக்க முடியாம செத்து மடியுது தமிழ் சனம். தினம் தினம் இதை டி.வி.யில பார்க்குறப்ப நமக்கே ரத்தமெல்லாம் கொதிக்குது. இந்தியாவை ஆட்சி பண்ணுறவங்க என்னத்த பண்ணிக்கிட்டிருக்காங்க?
-மக்கள் ஆய்வகத்தின் சார்பில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் நடத்திய கருத்தாய்வில் மக்கள் வெளிப்படுத்திய கருத்துகளின் சாராம்சம் இதுதான். சென்னை லயோலா கல்லூரியின் கீழ் [...]

Full Story

MIA : பணம், புகழ் வந்தால் தமிழர்களை மறக்கும், இவர்களுக்கு மத்தியில்

இலங்கையில் திட்டமிட்ட இனஅழிப்பு நடைபெற்று வருகிறது - மாதங்கி மாயா அருள்பிரகாசம்: தொலைக்காட்சி நேர்காணலின் GTNனின் தமிழ் வடிவம்:
இலங்கை வடபாகத்தில் மூன்றரை இலட்சம் மக்கள் போருக்குள் அகப்பட்டுள்ளார்கள். அங்கிருந்து அவர்களால் வெளியேற முடியவில்லை. அவர்களுக்கான உதவிகள் தடை செய்யப்பட்டுள்ளன. மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் உண்மையைச் சொல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு ஒரு இனஅழிப்புத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் இசைஞரான மாயா என்கிற மாதங்கி மாயா [...]

Full Story

ஈழப்போரில் இந்திய இராணுவம் - தமிழர் நெஞ்சில் தகிக்கும் நெருப்பு!

தமிழ்நாட்டில் எழுந்துள்ள தமிழீழ ஆதரவுப் பேரலை, தமிழக அரசியலிலும் சில முக்கியமான திருப்பங்களுக்கு வழி வகுத்துள்ளது.பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணமோ, 48 மணி நேரப் போர் நிறுத்தமோ தமிழீழ மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டு வரவில்லை. மாறாக, நாளுக்கு நாள் அங்கே நிலைமை மோசமாகிக் கொண்டுள்ளது.
பட்டினிப் போர், மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம், ஊர்வலம், கண்டனப் பொதுக்கூட்டம், மாநாடு போன்ற அனைத்து விதமான எதிர்ப்புகளும் பயனற்றுப் போனபின், தமிழக இளைஞர்கள் சிலர் தங்களையே கொளுத்திக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். ‘இனிப் [...]

Full Story

ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

இராணுவ பலத்தின் மூலம் தமிழ் மக்கள் இரண்டாம் தரக் குடிகள் என்ற நிலையை யாரும் கேட்பாரின்றி உறுதி செய்கிறது சிங்கள பேரினவாத அரசு. இந்த அநீதியான போருக்கு எந்த சர்வதேசத் தடையும் இல்லையென கொக்கரிக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. தடை இல்லையென்பதோடு ஆயுத உதவியும் ஆதரவும் கூட இந்த சர்வதேச அங்கீகாரத்தில் அடங்கியிருக்கிறது. புலிகளின் விமானத் தாக்குதலால் காயமடைந்த இந்திய இராணுவ நிபுணர்கள் மூலமாக இந்தியாவும் இந்த இனவெறிப் போரில் கலந்து கொண்டிருப்பது அம்பலமானது. ஆனாலும் இது குறித்து [...]

Full Story

“உரிமைக்காக போராடும் போராளிகளை பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பது சிறுபிள்ளைத்தனமானது”: விடுதலை இதழ் கண்

இரு தரப்பாரும் போரை நிறுத்தவேண்டும் என்று இதோபதேசம் செய்து வருகிறார்கள்.
போராளிகள் அங்கு போராடுவது அவர்களின் மக்களைக் காப்பாற்றுவதற்காக. அந்த மக்களும் தங்களின் வாழ்வுரிமைக்காக, மானவாழ்வுக்காக உயிரைத் துச்சமாகக் கருதி 24 மணிநேரமும் களத்தில் நிற்பவர்கள் போராளிகள்தான் என்ற உண்மையில் உண்மையாகவே இருக்கிறார்கள். உறுதியாகவும் உள்ளனர்.
ஈழத் தமிழர்கள் தங்களுக்காகப் போராடும் போராளிகளின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாலும், நல்லெண்ணத்தாலும், உண்மையிலே போராளிகள் போராடி வருவதாலும், விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழ் மக்களையும் பிரிக்கவே முடியாது என்ற உண்மையான கண்ணோட்டத்தைப் புரிந்து [...]

Full Story

இந்தியா கொடுத்த ஏவுகணைகளே தமிழர்களை காவு கொள்கின்றது: வைகோ குற்றச்சாட்டு

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாய்? என்ற கவிஞன் பாரதியின் வேதனைக்குரல், நம் இதயச்சுவர்களில் மோதும் வகையில், அடுக்கடுக்கான துன்பச் செய்திகள் தாக்குகின்றன.
தன்னுடைய குடிமக்கள் மீது வானூர்திகளில் வந்து குண்டு வீசித் தாக்கும் மாபாதகத்தை, அடாஃல்ப் ஹிட்லருக்குப் பின்னர் உலகில் எந்த ஒரு நாடும் செய்யத் துணியாத கொடூரத்தை, இலங்கையில் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது ஏவி கொன்று குவிக்கிறது. இதைச் சொன்னதற்காகத்தான், சிறிலங்காவின் [...]

Full Story

ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்….

தமிழன் எக்ஸ்பிரஸ் வார ஏடு நவம்பர் 19, 1997-ல் யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்…. என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு 2009 வரை விடை கிடைக்கவில்லை. நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, ‘வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்’ [...]

Full Story

ஈழத்தில் உயிர்பலி புலம்பெயர்தேசத்தில் தினவெடுக்கும் துரோகிள்

நீங்களும் நாங்களும் நினைப்பது போல் யுத்தம் முடிந்தால் சரி எல்லாம் வழமைக்குத் திரும்பி விடும். யாழ்தேவியில் யாழ்ப்பாணம் போய் கசூரினாவில் குளித்து கூவிலில் கள்ளடித்து பருத்தித்துறையில் புட்டும் கணவாயக்கறியும் உண்ணலாம் என்பது சிந்தனைக்கு மட்டும் தான். புலிகள் தோற்றால் போதும் எல்லாம் கிடைத்துவிடும் என்று காத்துக்கிடக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் புலிகள் வெல்லும் வரை பொறுத்திருப்போம் என புலம்பெயர் தேசத்தில் தினவெடுக்கும் தோள்களுக்கும் இந்த மனித அவலங்கள் புரியாதவை.
முல்லைத்தீவு - பரந்து விரிந்த உலகின் கவனம் நிலைகுத்தி நிற்கும் [...]

Full Story

விடுதலைப் புலிகளால் உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்படும் கள செய்திகளே, உண்மையானவை

கல்மடு குள அணை உடைப்பைத் தொடர்ந்து, பெரும் சமர் மூண்டுள்ளதாக பல செய்திகளும், வதந்திகளும் உடைப்பெடுக்கத் தொடங்கியுள்ளது.கொழும்புத் தகவலொன்று வெளிவந்த ஆதாரமற்ற செய்தி இணையத் தளமொன்றில் பதிவு செய்யப்பட்டு, ஏனைய சில ஊடகங்களிற்கும் வேகமாகப் பரவியது.
இச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளாமல் சிறீலங்கா உளவுப்பிரின் பொறிக்குள், சில இணயத் தளங்கள் விழுந்துவிட்டன போல் தெரிகிறது.
ஆனாலும் யுத்தம் தீவிரமாகத் தொடர்வது நிஜம். குள உடைப்பில் இராணுவத்திற்கு நிச்சயம் ஆளணி, படைக்கல இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும். அரச [...]

Full Story

பலமுடன் இருந்தால் மதிப்பார்கள், நிலத்தில் கிடந்தால் மிதிப்பார்கள்

பலமுடன் இருந்தால் மதிப்பார்கள், நிலத்தில் கிடந்தால் மிதிப்பார்கள் என்கிற சமூக இயங்கியல் தத்துவமே இந்த அதிரடி அறிக்கையை விளக்கும்.சமாதானம் பேசச் சொல்லி, தடையும் விதித்தவர்களே இந்த ஜனநாயகக் குத்தகைக்காரர்கள்.45 நிமிட நேரத்தில் பிரித்தானியாவைத் தாக்கும் வல்லமை, சதாம் ஹுஸைனுக்கு இருப்பதாக மக்களை ஏமாற்றி, ஜோர்ஜ் புஷ்ஷின் போர் வெறிக்கு காவடி தூக்கிய தொழிற் கட்சியே விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்கிறது.பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையை அங்கீகரிப்பதாக மேலும் அவ்வறிக்கை விளக்கமளிக்கிறது.கிளிநொச்சி படையினர் [...]

Full Story